செய்திகள்

இந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை

இந்த வார ராசிபலன்கள்

இந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை

இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் புதன், மீனம் ராசியில் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் – கும்பம் ராசி

செவ்வாய் – தனுசு ராசி

புதன் – கும்பம் ராசி

குரு – தனுசு ராசி

சுக்கிரன் – மீனம் ராசி

சனி – மகரம் ராசி

ராகு – மிதுனம் ராசி

கேது – தனுசு ராசி

சந்திராஷ்டமம் ராசிகள்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 23,2020 பிற்பகல் 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது இரண்டு நாட்களும் கவனமாக இருக்கவும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி முதல் பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி முதல் பிப்ரவரி 28,2020 நள்ளிரவு 1.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

மேஷம்:

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் கேது, குரு உடன் இணைந்திருக்கிறார். மூன்றாம் வீட்டில் ராகு பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது.

சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வீடு மனை யோகம் அமையும். பாக்கியங்கள் நிறைந்த வாரம். குரு மங்கள யோகம் அமைந்துள்ளது. அப்பா வழியில் சொத்துக்கள் சேரும். அப்பாவிற்கு பணவரவு வரும். பிரச்சினைகள் தீரும். உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.

வசதி வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கலாம். பத்தாம் வீட்டில் சனி இருப்பதால் புதிய வேலைகள் தேடி வரும். லாப ஸ்தானத்தில் உள்ள சூரியன் சந்தோஷங்களை தேடி தருவார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார கஷ்டங்கள் நீங்கும்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வீட்டு வேலைகளை அற்புதமாக தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்களின் பொருளாதார நிலைமை உயரும். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்குங்கள். அமாவாசை நாளில் குல தெய்வத்தை கும்பிடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் இரண்டாம் வீட்டில் ராகு, உங்க ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

பத்தாம் வீட்டில் சூரியன், புதன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு, செவ்வாய், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணவரவு அதிகமாகும்.

தொழிலில் லாபம் வரும். வேலை செய்யும் இடத்தில் நிதானமாக பேசுங்கள். பேச்சுவார்த்தையினால் பணவரவு கிடைக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வயது மூத்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

உங்க பிசினஸ் வெற்றியை தேடி தரும். பெண்களுக்கு பொருளாதார உயர்வு ஏற்படும். உங்களுக்கு நோய்கள் எட்டிப்பார்க்கும் மருத்துவ ஆலோசனை எடுத்துக்கங்க. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு சந்தோஷங்கள் தேடி வரும்.

அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம். நிதானமும் பொறுமையும் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு களத்திர ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சனி, பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும் பிப்ரவரி 23,2020 பிற்பகல் 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது இரண்டு நாட்களும் கவனமாக இருக்கவும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு இந்த வாரம் வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். படைப்பாளிகளுக்கு நன்மைகள் தேடி வரும். சமூக வலைத்தளங்களில் கவனமாக இருங்க. வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள்.

உங்களின் புகழ் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. அஷ்டமத்து சனி அயற்சியை தரலாம்.

பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க பணவரவு வரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் வரும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்:

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் புதன்,சூரியன், ஏழாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, கேது செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். கடக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த வாரம்.

உங்க ராசி அதிபதி சந்திரனால் வார மத்தியில் குழப்பம் வரும் சந்திராஷ்டம காலத்தில் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. பணவரவு அதிகமாகும். உங்களுக்கு சேமிப்பு அதிகமாகும். கொடுத்த கடன் திரும்ப வருவதில் சிக்கல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க விரைய செலவுகள் எட்டிப்பார்க்கும். பிசினஸ் செய்பவர்கள் கவனமாக இருங்க. நேர்மையான விசயங்கள் நல்லது.

மூத்த சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளிநாடு வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையே பேச்சில் கவனமாக இருங்க.

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். உங்க ராசி அதிபதி சந்திரனை தினசரி வணங்குங்கள். மாலை நேர வழிபாடு மனதிற்கு இதம் தரும். கடகம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி முதல் பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம்,

வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். சிவ ஆலயம் சென்று பாலபிஷேகம் செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை கும்பிடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் சூரியன், புதன், ஆறாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த வாரம் உங்க ராசிக்கு சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் சாதகமாகவே உள்ளது.

வார இறுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். உங்க ராசி அதிபதி சூரியன் பார்வையும், குருவின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுகிறது. வெற்றிகரமான வாரம். நீங்க நினைத்தது நிறைவேறும். பணவசதிகள் அதிகமாக இருக்கும்.

சனி பகவான் சஞ்சாரத்தினால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கும். எதிரிகள் மூலம் வந்த தொந்தரவுகள் நீங்கும். ராகுவினால் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். அலுவலகத்தில் சம்பள உயர்வுடன் புரமோசன் கிடைக்கும். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் வேலையில் கவனமாக இருங்க.

விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பத்திரமாக வைத்திருங்கள். கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். உங்க ராசிநாதன் சூரியபகவானை தினசரி வணங்குங்கள். நன்மைகள் நடைபெறும்.

பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி முதல் பிப்ரவரி 28,2020 நள்ளிரவு 1.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். காலபைரவரை கும்பிடுங்கள் கவலைகள் தீரும்.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஆறாம் வீட்டில் சூரியன்,புதன், சனி இந்த வாரம் உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் செவ்வாய், கேது, குரு, இணைந்திருக்கிறார்கள்.

களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சிலர் புது வேலைக்கு மாறலாம். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்.

சிலர் சுய தொழில் செய்வீர்கள். பிசினஸ் நல்ல லாபத்தை கொடுக்கும். புத்திரபாக்கியம் இல்லாதர்களுக்கு நல்ல யோகமும் தேடி வரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினை, மூட்டு பிரச்சினைகள் வரலாம் கவனம். மருத்துவ ஆலோசனை தேவை. தன்வந்திரி பகவானை வணங்குங்கள் நோய்கள் தீரும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் ஐந்தாம் வீட்டில் புதனோடு இணைந்திருக்கிறார். சனி நான்காம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள். ஆறாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார்.

ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் நல்ல வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வாரம். சந்திரன் சஞ்சாரத்தினால் பெண் தொழில் முனைவோர்களுக்கு லாபம் வரும் வங்கிக் கடன் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். அர்த்தாஷ்டம சனி இருப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்க உடல் நலத்தையும் கவனிங்க.

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுங்க. தேர்வு நேரம் என்பதால் ஆர்வமும் விடா முயற்சியும் தேவை. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் நான்காம் வீட்டிலும் சனி மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு இந்த வாரம் பணமழை பொழியப்போகிறது.

செவ்வாய் உங்களுக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பேச்சில் கொஞ்சம் கவனமாக இருங்க. பெண் தொழில் முனைவோர்கள், மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கு ரொம்ப சந்தோஷமான வாரமாக அமைந்துள்ளது.

சிவனை வழிபட வெற்றிகளை தேடித்தரும். சந்திரன் வார மத்தியில் உங்க ராசியில் நீசமடையும் போது சில பாதிப்புகள் ஏற்படலாம். முன்னோர்களை வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும். பித்ருதோஷங்கள் இருந்தால் நீங்கும். கோவில்களில் அன்னதானம் செய்யுங்கள்.

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரியன் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதனோடு இணைந்திருக்கிறார். சனி குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் உங்க ராசியில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள். நான்காம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார்.

சனியால் சில சங்கடங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். புதிய வேலைகள் கிடைத்தாலும் சில மன சஞ்சலங்கள் இருக்கத்தான் செய்யும். குருவின் அனுக்கிரகம் உங்களை சந்தோஷப்படுத்தும். ரொம்ப பாசிட்டிவ் ஆக இருங்க. எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். வீடுகளை புதுப்பிக்க அடமானக்கடன் வாங்குவீர்கள்.

வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரும். மூத்த குடிமக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரலாம். புதிய சொந்தங்கள் தேடி வரலாம்.

காதல் வரும் போது வாழ்க்கைத்துணையை கவனமாக தேர்வு செய்யுங்கள். சந்தோஷங்கள் அதிகரிக்க நீங்க சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குங்கள்.

மகரம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் விரைய ஸ்தானத்தில் கேது, குரு, செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுப காரியங்கள் தானாக நடக்கும். சுக ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

வண்டி வாகனங்கள் வாங்க வேண்டிய யோகம் வரப்போகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகங்கள் தேடி வரும். இந்த வாரம் நீங்க நிறைய முதலீடு செய்வீர்கள். தினசரி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யுங்கள் லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே உறவில் உற்சாகத்தை கொடுக்கும்.

சனிபகவான் ராசியில் இருப்பதால் மனதளவில் சில குழப்பங்கள் ஏற்படும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிங்க. உணவில் அவ்வப்போது இஞ்சி சேர்த்துக்கொள்ளுங்கள். வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. வெள்ளிக்கிழமைகளில் நீங்க மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் சூரியன்,புதன். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் குரு,கேது, செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு சந்தோஷமான வாரமாக இருக்கப்போகிறது. ராசியில் உள்ள சூரியன் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தரப்போகிறார்.

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு அற்புதமாக இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வீடு மாறுவீர்கள். திருமண யோகம் கை கூடி வருகிறது.

லாப ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் வந்துள்ளது காரணம் குரு உடன் செவ்வாய் இணைந்துள்ளார். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரும். செய்யும் தொழிலில் லாபங்கள் பல மடங்கு கிடைக்கப்போகிறது. பெண்களுக்கு வீட்டிலும் சமூகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும்.

நன்றாக உறங்குங்கள் அப்போதுதான் உற்சாகமாக எழுந்திருக்க முடியும். கல்வியில் கவனம் செலுத்துங்க. இந்த தேர்வினை உற்சாகமாக எதிர்கொள்வீர்கள். இந்த வாரம் நீங்க செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிக்குள் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சூரியன்,புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றனர். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு,கேது, செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் சந்தோஷத்தை தரும்.

இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரம். காரணம் உங்க ராசியில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. நல்ல பண வருமானம் வரும். உங்க பேச்சில் தெளிவாக இருங்க. கவனமாக பேசுங்க இல்லாவிட்டால் பிரச்சினைகள் வந்து விடும். பயணங்கள் அதிகமாக செல்வீர்கள்.

வண்டி வாகனங்களில் போகும் போது ரொம்ப கவனமாக போங்க. சாலை விதிகளை மதிங்க. இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். மாணவ மாணவிகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் அதிகமாக சேரும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த வாரத்தை சந்தோஷமாக கழித்து விடலாம். இந்த வாரம் நீங்க சிவ பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

-ஜோதிடர் மயூராஅகிலன்

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top