செய்திகள்

பாடசாலை சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர வைக்கும் வீடியோ!

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

தகவல் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், நம் வாழ்வில் இடம் பிடித்த ஒரு அங்கம் தான் செல்போன்.

மாணவப் பருவத்திலேயே நம் தோளில் தொற்றிக் கொள்ளும் செல்போன்கள் கடைசி வரை உடன் வருகின்றன.

ஸ்மார்ட்போனின் தாக்கத்தால் மாணவ மாணவிகள் சீர்கெட்டு திரிகிறார்கள் எனலாம். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் வாட்ஸ் அப், பேஸ்புகே மற்றும் டிக் டாக் மோகமும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் மாணவன் ஒருவர் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார். அதற்கு அந்த மாணவியும் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது.

என்ன செய்கிறோம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற புரிதலே இல்லாமல் சுற்றி திரியும் இது போன்ற மாணவ மாணவிகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top