செய்திகள்

காட்டு பகுதியில் 3 மாணவிகள்.. கையில் பீர் பாட்டில்.. சியர்ஸ் வேறு.. ஷாக் வீடியோ!

ஒரு வீடியோ வெளியாகி உள்ளது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள். மொத்தம் 4 பேர். நால்வருமே மாணவிகள்.

ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர். ஒரு மாணவி வீடியோ எடுக்க.. மற்ற 3 பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள். அது ஒரு காட்டுப்பகுதி போல உள்ளது.

பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தயாராக கொண்டு வந்துள்ளனர். பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி குடிக்கிறார்கள்.

“பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..”.. என்னடி இப்படி குடிக்கிறீங்க?”, பாட்டிலை தூக்கி போடுங்கடி… எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு” இப்படி அந்த வீடியோவில் பேச்சுக்கள் பதிந்துள்ளன.

எந்த குற்ற உணர்வும் இந்த பெண்களிடம் தெரியவில்லை.. யார் வீட்டு பிள்ளைகளோ, என்ன பாடுபட்டு இவர்களை வீட்டில் படிக்க வைக்கிறார்களோ. அதுவும் தெரியவில்லை.

இந்த வீடியோவை பார்த்தால் அவர்கள் வயிறு எப்படி துடிக்கும் என்றும் நம்மால் யோசிக்க முடியவில்லை.

முன்பெல்லாம் மூலைக்கு மூலை தனியார் மதுபான கடைகள் இயங்கி வந்தன. அதனால் ஏதாவது ஒரு சில கிராமப்புறத்தில் அதுவும் காட்டுப்பகுதியில் மட்டும்தான் கள்ளச்சாராயம் விற்பார்கள்.

இது ஓரளவு குடிமகன்களின் எண்ணிக்கையை குறைத்தது.. சாராயக்கடையில் மதுவை வாங்கி கொண்டு, அதை யாருக்கும் தெரியாமல் குடித்து முடிப்பதற்கே அன்று ஆண்கள் நடுங்கி போய்விடுவார்கள்.

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்! மதுக்கடைகள் அரசு ஏற்று நடத்துகிறது. மறைவாக நடத்தப்பட்டவை அம்பலமாக நடக்கிறது. பகிரங்கமாக குடிக்கிறார்கள்.. இதில் சில இளம்பெண்கள் சிக்கி கொண்டுள்ளது வேதனையை தருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top