செய்திகள்

“காதல் ஓவியம்”… தாஜ் மஹாலில் மனைவியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்!

donald trump, tajmahal, trump visit to india, trump's 2 days visit, donald trump to visit tajmahal, டொனால்ட் டிரம்ப், தாஜ்மஹால். இந்தியாவுக்கு டிரம்ப் வருகை, டிரம்பின் இந்தியா வருகை, தாஜ்மஹாலுக்கு வருகைத் தரும் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் வரும் 24ஆம் திகதி மனைவி மெலானியுடன் தாஜ் மஹாலை பார்வையிடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரும் 24ஆம் திகதி மனைவி மெலானியுடன் இந்தியாவுக்கு வரவுள்ளார்.

அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வரவுள்ள அவர் இந்தியாவில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்ததும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.

பின்னர் மோடியும் டிரம்பும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளனர். அங்குள்ள மோட்டாரோ அரங்கத்தை சென்றடைகிறார்கள்.

இதற்காக இவர்கள் பயணிக்கவுள்ள சாலை விரிவாக்கம் செய்தல, புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், சுவர்களில் ஓவியங்கள் வரைதல் என அழகுப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் டிரம்ப் அங்குள்ள உலகின் மிகப பெரிய விளையாட்டு அரங்கமநான மோட்டாரோ மைதானத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் டெல்லி செல்லும் டிரம்ப் இந்தியாவுடன் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறார். இதையடுத்து அவர் 24-ஆம் திகதியே தாஜ்மஹாலை மனைவி மெலானியுடன் பார்வையிடுகிறார்.

இதற்காக அசுத்தமான யமுனை ஆற்றில் தண்ணீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரு நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்த்தால் டிரம்ப் எத்தனை பிரமிப்படைய போகிறாரோ? யமுனை நதிக்கரையில் மனைவிவுடன் காதல் கோட்டையை பார்க்கும் டிரம்ப் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்.

மேலும் மெலானியுடன் அவர் காதல் பாடல்களை முணுமுணுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யமுனை நதியை தூய்மைப்படுத்துவதன் மூலம் நீர் மாசும், காற்று மாசும் சரி செய்யப்படும்.

கடந்த முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்த போது ஆக்ராவை கோஸ்ட் சிட்டி என விமர்சித்திருந்ததை அடுத்து தற்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top