செய்திகள்

விளையாட்டின் ஆஸ்கர் விருதை வென்றார் சச்சின்!!

இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் என்று போற்றிப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு விளையாட்டு உலகின் மிக உயரிய விருதான லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருது என்று கருதப்படும் லாரியஸ் விருது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருதினை கால்பந்து வீரர் மெஸ்சிக்கும், கார் பந்தய வீரர் ஹாமில்டோனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான லாரியஸ் விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில், விளையாட்டு உலகின் மிகச் சிறந்த தருணமாக இந்திய கிரிக்கெட் அணியினர் 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெற்று சச்சின் டெண்டுல்கரை, அவர்களின் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.

ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கர் லாரியஸ் விருதைப் பெற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் சச்சினுக்கு இந்த விருதை வழங்கினார்.

விருதை பெற்ற பின்னர் பேசிய சச்சின், “ இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகவும் அரிதாக ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top