செய்திகள்

குட்டி ஸ்டோரி பாடல்.. ஒரே இங்கிலிஷ்தான்.. நோ டென்ஷன் பேபி.. மரண மாஸ்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இசையமைபப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்காளக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் கடந்த 10 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.

அதாவது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினமான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்ட சோனி நிறுவனம் ஆட்டம் ஆரம்பம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. அந்தக் கதை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொல்லப்படும். தளபதியின் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்து மாஸ் காட்டியது.

ஒரு குட்டி ஸ்டோரி ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் அப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது.

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியிருக்கிறார் நடிகர் விஜய். பிகில் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் பெறும் ஹிட்டடித்தது.

இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை கனா படத்தின் இயக்குநரும் நெருப்புடா பாடலை பாடியவருமான அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்.

அறிவித்தப்படி மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் பாடல் வெளியானது.

டிகர் விஜய் இந்த பாடலின் சிங்கிள் ட்ராக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏராளமான ஆங்கில வார்த்தைகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி பே அட்டென்ஷன் லிஸன் டு மி.. ஜஸ்ட் லிசன் புரோ.. வேணாம் டென்ஷன்.. லைப் இஸ் ஷார்ட்.. பி ஹேப்பி என அதிகளவில் ஆங்கில வார்த்தைகளும் தமிழ் வார்தைகளும் கலந்துகட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியான சில நிமமிடங்களிலேயே நான்கு லட்சம் வியூஸ்களை அள்ளியிருக்கிறது. இதேபோல் பாடலுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.பாடல் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் என்பதால் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரென்டிங் எப்போது மணி 5 ஆகும் மாஸ்டர் சிங்கிள் ட்ராக்கை கொண்டாடலாம் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பாடல் வெளியானதும் திருவிழா போல கொண்டாடி தீர்க்கின்றனர். டிவிட்டரிலும் #Orukuttykathai, #KuttiStory, #Master, #Mastersingletrack ஆகிய ஹேஷ்டேக்ஸ் ட்ரென்ட்டாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top