செய்திகள்

சீமானின் வீடியோக்களை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார். இவர் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்தார்.

அப்போது சீமான் தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய விஜயலட்சுமி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார்.

சமீபத்தில் தஞ்சை பெரியகோவிலில் சாமி தரிசனம் செய்த சீமான், சிவபக்தர்களான என்னையும் என் தாயையும் கிண்டல் செய்துவிட்டு, இப்போது நெற்றியில் விபூதி பட்டை பூசி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருப்பது எந்த வகையில் சரி? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் குறித்த இன்னும் சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சீமான் சட்டை அணியாமல், ‘ஏ பொண்டாட்டி நான் ஒன்னும் கெட்டவன் இல்லடி’ என்று சொல்கிறார்.

அதற்கு விஜயலட்சுமி அப்புறம் என்று கேட்க, கேடு கெட்டவன் என்று கூறுகிறார். அதேபோல் மற்றொரு வீடியோவில், ‘பொண்டாட்டி மாமாவ நீ நல்லவன்னு நெனைக்காத, என்று சொல்ல அதற்கு விஜயலட்சுமி, என்ன மாமா இப்படியெல்லாம் சொல்லுறீங்க என்று கேட்க, ரொம்ப நல்லவன் என்கிறார்.

இதை கண்ட சிலர், அட நீங்க வேற, சினிமா ரிகர்சல் னு சொல்லிடுவான் என்று சீமானை வறுத்தெடுத்தும், இன்னும் சிலரோ, வேற ஏதாவது புதிதாக சீமானை பத்தி தவறாக போட்டு அரசியல் செய்யுங்கள் என்று சீமானுக்கு ஆதரவாகவும் கூறிவருகிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top