செய்திகள்

பிரபல டிவி தொகுப்பாளினியை எரித்து கொலை செய்த கணவர்… கள்ளகாதலால் நடந்த பயங்கரம்!

பிரபல டிவி தொகுப்பாளினியை

பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் அனிதா சிங். இவர் கடந்த 30 ஆம் திகதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் கிடந்த அப்பெண்ணின் உடலை நைனிடால் பகுதியிலிருந்து காவல்துறையினர் மீட்டனர். அனிதா சிங்கை கொலை செய்ததாக அவரது கணவர் ரவீந்தர் பால் சிங் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அனிதா சிங் வேறொரு நபருடன் தகாத உறவிலிருந்ததாக தெரிகிறது. இதையறிந்த அவரது கணவர் கடந்த மாதம் 30ம் திகதி தனது மனைவியை நைனிடாலில் உள்ள நண்பர் குல்தீப் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அனிதா சிங் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து நண்பர் குல்தீப் உதவியுடன் அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அனிதாவின் உடலை காட்டுக்கு எடுத்து சென்று எரித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் ரவீந்தர் பால் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top