செய்திகள்

நெஞ்சுவலி… மாணவிகளை வீட்டில் சேர்த்துவிட்டு உயிரிழந்த ஆட்டோ சாரதி

நெஞ்சுவலி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவர் அதேபகுதியில் உள்ள மாணவிகளை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டில் விடும் வேலையை செய்து வந்துள்ளார்.

சிறுமிகளிடம் அன்பாக நடந்துகொள்ளும் ராமலிங்கத்தை மாணவிகள் ஆட்டோ மாமா என்று தான் செல்லமாக அழைப்பார்களாம்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவிகளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதி வழியிலேயே ஆட்டோவை நிறுத்திய அவர் மாணவிகளை ஆட்டோவிலிருந்து இறக்கி வேறு ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் தனது ஆட்டோவில் ஏறி செல்ல முற்பட்ட அவர், நெஞ்சுவலியால் ஆட்டோவிலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அவரின் உறவினர்கள் ராமலிங்கத்தின் உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

தான் சாகும் தறுவாயிலும் மாணவிகளைப் பத்திரமாக வீடு சேர்த்த ராமலிங்கத்தை நினைத்து அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top