செய்திகள்

கால் டாக்ஸியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

இளம்பெண்

கொல்கத்தா நகரில் 46 வயதான அந்த பெண் விஞ்ஞானி கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஓலா டாக்ஸி மூலம் பயணம் செய்துள்ளார்.

அந்த வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பயணிகளிருந்தனர். டாக்ஸியில் ஏறியதும் அந்த பெண் காருக்குள்ளிருந்து வந்த ஒரு பத்தி வாசனையை நுகர்ந்து வீசிங் பிரச்சினைக்குள்ளானார்.

உடனே அந்த பெண் தனக்கு சுவாசிப்பதில் பிரச்னையாக உள்ளதால் அந்த டிரைவரிடம் அந்த பத்தியை தூக்கி எறியுங்கள் அல்லது அதை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

அந்த ஓலா ட்ரைவர் அதெல்லாம் நிறுத்த முடியாதென அவரிடம் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் சிறிது தூரத்தில் மற்ற பயணிகளை இறக்கிவிட்ட டிரைவர் இந்த பெண்ணை மட்டும் பல இடங்களில் சுற்றிவிட்டு மூன்று கிலோமீட்டர் தள்ளி இறக்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் பேசியதை விட அதிகமாக 100 ரூபாய் கேட்டார்.

அதற்கு அப்பெண் தரமுடியாதென கூறிவிட்டு இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார். அதற்கு பிறகு அந்த ஓலா ட்ரைவர் 56 முறை கால் செய்து பணம் கேட்டு டார்ச்சர் செய்தாரென கூறினார்.

இது தொடர்பாக அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளித்தார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top