செய்திகள்

6 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி ஊழியரின் அட்டூழியம்.!

பாலியல் தொல்லை

திருச்செந்தூர் அருகே 6 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தண்டுபத்தில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ளது. இங்கே காயாமொழியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.

இவர், அந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்

இது தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமி யாரிடமும் கூறாததை சாதகமாக்கிக்கொண்டு சரவணன் பாலியல் தொல்லையில் தொடர்ந்து அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகள் சோர்வாக இருப்பதை அறிந்து பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூமை குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை உறுதி செய்தனர். பின்னர் பள்ளியின் தோட்டத் தொழிலாளி சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top