செய்திகள்

பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை பரினீத்தி

பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

கிராமி விருது விழாவில் லாங் ஓப்பன் டிரெஸ்ஸில் தனது மொத்த அழகும் தெரியும் படி செம்ம செக்ஸியாக உடை அணிந்து பிரியங்கா சோப்ரா உலகளவில் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரினீத்தி சோப்ரா, தனது முன்னழகு மற்றும் தொடையழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

மேலும், தனது ட்வீட்டில், பாலிவுட் நடிகர் வருண் தவான் குறித்தும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் பரினீத்தி சோப்ரா நடித்து வருகிறார்.

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வரும் நிலையில், சாய்னா நேவால் பயோபிக்கும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஷிக் 2, சாஹோ, ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான் முதலில் சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க தேர்வானார்.

ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷ்ரத்தா கபூர் சாய்னா நேவால் பயோபிக் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், பரினீத்தி சோப்ரா சாய்னாவாக நடித்து வருகிறார்.

டிஸ்னி தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் பிரம்மாண்டமாக உருவான ஃப்ரோஸன் 2 ஹாலிவுட் படத்தின் இந்தி வெர்ஷனுக்கு அக்கா பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தங்கை பரினீத்தி சோப்ரா குரல் கொடுத்திருந்தார்.

எல்சா கதாபாத்திரத்திற்கு பிரியங்கா குரல் கொடுக்க ஆன்னா கதாபாத்திரத்திற்காக வாய்ஸ் கொடுத்து பாராட்டுக்களை பெற்றார் பரினீத்தி.

பரினீத்தி சோப்ரா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்துடன் வருண் தவானையும் இழுத்து கேப்ஷன் போட்டுள்ளார். வருண் தவான் இந்த படத்திற்கு ஒரு டைட்டில் சொன்னார். ஆனால், அதனை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று வருணுக்கும் டேக் போட்டு அவரையும் வம்பில் மாட்டி விட்டுள்ளார் பரினீத்தி.

வருனீத்தி டிஷூம் உள்ளிட்ட சில படங்களில் வருண் தவானுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் பரினீத்தி சோப்ரா. பாலிவுட்டில் இருவரும் ஹாட் ஜோடி என்ற வதந்தியும் வைரலாக பரவி வருகிறது.

பரினீத்தி என்ற பெயரை ரசிகர்கள் மாற்றி வருனீத்தி என அழைத்து வருகின்றனர். தற்போது வருண் தவானை டேக் செய்து பரினீத்தி போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழும் ரசிகர்கள் அதே கமெண்ட்டை போட்டு வருகின்றனர்.

கிராமி விருது விழாவுக்காக லாங் ஓப்பன் டிரெஸ்ஸில் படு கவர்ச்சியாக ஆடை அணிந்து உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்நிலையில், அக்கா பிரியங்கா சோப்ராவுக்கு போட்டியாக நீங்களும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பார்க்கிறீங்களா என சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top