செய்திகள்

பணத்தை திருப்பி கொடுங்க.. வேண்டுமென்றே இருமி கொரோனா வைரசை பரப்பிய சீன இளைஞர்..

கொரோனா வைரஸ் காரணமாக மொத்த சீனாவும் நடுநடுங்கி போய் இருக்கிறது. அங்கு மக்கள் நாளுக்கு நாள் இந்த வைரஸ் காரணமாக செத்து மடிந்து வருகிறார்கள். இதுவரை அங்கு 131 பேர் பலியாகிவிட்டனர்.

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் இளைஞர் ஒருவருக்கு நான்கு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் நான்கு நாட்களாக அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் அவருக்கு நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே சென்றது.

நேற்றும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்துள்ளது. அவருக்கு சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. அதேபோல் கூடுதலாக அவர் சிகிச்சை பெறவும் பணம் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனை வரவேற்பு அறைக்கு சென்று தன்னுடைய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். நீங்கள் கொடுத்த சிகிச்சை எனக்கு பலன் அளிக்கவில்லை. உங்கள் சிகிச்சை மூலம் எங்களுக்கு உடல் சரியாகவில்லை.

அதனால் எனக்கு பணத்தை திரும்ப கொடுங்கள், என்று சண்டை போட்டு இருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகிகள் அவரிடம் பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் கடைசியில் கோபம் அடைந்த அந்த இளைஞர் தன்னுடைய மாஸ்க்கை கழற்றியுள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் முகத்திற்கு அருகே சென்று இருமி இருக்கிறார். பணம் கொடுக்காத கோபத்தில் அவர் இப்படி செய்துள்ளார்.

எனக்கு பணம் தரவில்லை, சரியாக சிகிச்சையும் தரவில்லை. அதனால் இந்த வைரஸை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டே அவர் தும்மி இருக்கிறார்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் செய்தது பெரும் தவறு என்று கூறியுள்ளனர். தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்து தனி மருத்துவமனை அறையில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top