செய்திகள்

டயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவரு தானாம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா
அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர்.

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக
சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள்.

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற
மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர்.

பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நயன் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா அவர்கள் தயங்குவது கிடையாது.

இந்த ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார்.

தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வந்த பிகில், விசுவாசம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்களுக்கு நயன்தாரா என்று பெயர் வைத்தது யார்? என்று சோசியல் மீடியாவில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’.

இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். இவர் முதன் முதலாக நடித்த
மனசினகாரே என்ற படத்தின் இயக்குனர் ஜான் டிட்டோ அவர்கள் நான் தான் டயானாவுக்கு பதிலாக நயன்தாரா என்று பெயர் வைத்தேன் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இந்த கருத்திற்கு இயக்குனர் இயக்குநர் சத்யன் அந்திக்காடு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஏன்னா, நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்தவர் ஜான் டிட்டோ கிடையாது. நானும்,
இயக்குனர் ரஞ்சன் பிரமோதும் தான் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்து
பரிந்துரைத்தோம் என்று தெரிவித்து உள்ளார்.

இப்படி நயன்தாராவுக்கு நான் தான் பெயர் வைத்தேன் என்று மாத்தி மாத்தி சோசியல்
மீடியாவில் இயக்குனர்கள் விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள்.

யார் பெயரை தேர்வு செய்திருந்தாலும் சரி நயன்தாராவுக்கு அந்த பெயர் சினிமாவை
பொருத்தவரையில் ராசியாகவே அமைந்துவிட்டது. ஆனால்,நிஜ வாழ்க்கையில் தான் பல தோல்விகளை தந்தது என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில்
கமிட்டாகியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத்
தயாரிக்கிறது.

ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்கள். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இந்துஜா, மெளலி, ஊர்வசி நடிக்கிறார்கள். இந்தப் படம் கோடை
விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top