செய்திகள்

இதுதான் கொரோனா வைரஸ்! சீனா வெளியிட்ட படம்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 இலட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 2800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர்.

வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 6ஆம் திகதி ஒரு நோயாளியிடமிருந்து, `என்.பி.ஆர்.சி 2020.00001′ என்ற வரிசை எண்ணுடன் இந்த வைரஸ் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணிய படம்தான் கொரோனா வைரஸ்க்கான முதல் மாதிரிப் படம். பின்னர், ஜனவரி 22ஆம் திகதி என்.பி.ஆர்.சி 2020.00002 என்ற எண்ணுடன் மற்றொரு நோயாளியிடமிருந்து பிரித்தெடுத்துள்ளனர். இரண்டாவது நுண்ணிய படத்தையே அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் பெய்ஜிங்கிற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் வுஹான் பகுதியைச் சேர்ந்த மக்களை வெளியேற்றவும் அந்நாட்டு அரசுகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நநிலையில், வுஹான் நகரின் மேயர் சோவ் சியான்வாங், `வுஹான் நகரத்துக்குள் வருவதும் வெளியில் செல்வதும் தடை செய்யப்படுவதற்கு முன்பாக இங்கிருந்து சுமார் 50 இலட்சம் பேர் வெளியேறினர்” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

முகமூடி அணிந்தபடி அந்நகரத்தில் ரயில் நிலையத்தில் அதிகமான மக்கள் காத்திருக்கும் புகைப்படமும் வெளியானது.

இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 இலட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இந்த வைரஸ் தாக்குதலால் பிப்ரவரி 4திகதிக்குள் வுஹான் நகரில் மட்டும் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று கணித்துள்ளனர்.

சீனாவின் வசந்த கால விடுமுறை ஜனவரி 30ம் திகதியோடு முடிய இருந்தது. இந்தசூழலில் விடுமுறையை பிப்ரவரி 2ஆம் திகதிவரை நீட்டித்திருக்கிறது சீனா.

தொடர் விடுமுறையால் சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதால், வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் விடுமுறையை சீன அரசு அதிகரித்திருக்கிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top