செய்திகள்

அம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்..

கள்ளக்காதலன்

அம்மாவுக்கு ஒரு கள்ளக்காதலன். மகளுக்கு ஒரு கள்ளக்காதலன். கடைசியில் 2 கள்ளக்காதலர்களும் நடுரோட்டிலேயே அடித்து உதைத்து கொண்டனர். இறுதியில் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

வேலூரை சேர்ந்தவர் பரத். 36 வயதாகிறது. இவர் ஒரு ஆட்டோ டிரைவர். வேலூர் சாரதி மாளிகை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவரும்கூட… கல்யாணமாகி செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதே வேலூரை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ள உறவு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, இந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கும் கள்ள உறவு இருந்திருக்கிறது. அதாவது அந்த அம்மாவுடன் மைக்கேல் என்பவருக்கும், அவரது மகளுடன் பரத்துக்கும் உறவு நீடித்து வந்ததாக தெரிகிறது

இதுதொடர்பாக பரத் – மைக்கேல் 2 பேருக்குள்ளும் தகராறு வந்திருக்கிறது. இந்த சமயத்தில் பரத் புதிதாக ஒரு வீடு கட்டினார்.. அதற்காக நேற்று முன்தினம் கிரகபிரவேசம் செய்தார்.

கிரகபிரவேசம் முடிந்த கொஞ்ச நேரத்தில் அந்த புது வீட்டிலிருந்து கிளம்பி பெரியார் நகர் சென்றார். அந்த சமயத்தில் மைக்கேல் வந்திருக்கிறார்.. நடுரோட்டிலேயே திரும்பவும் சண்டை போட்டுள்ளனர்.

பிறகு தகராறு முடிந்து பரத் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார்.. ஆனால் மைக்கேல் பின்னாடியே ஒரு இரும்பு கம்பியை எடுத்து கொண்டு போய், பரத்தின் தலையில் ஓங்கி அடித்துவிட்டார்.

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் கீழே விழுந்தார். ஆனால் கீழே விழுந்தும், ஆத்திரம் அடங்காமல் மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தை அடித்து கொண்டே இருந்தார்.

சிறிது நேரத்தில் பரத் உயிர் பிரிந்தது.. தகவலறிந்து வேலூர் வடக்கு போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு, மைக்கேலையும் கைது செய்தனர். கிரகப்பிரவேசம் முடிந்து கொஞ்ச நேரத்திலேயே ஆட்டோ டிரைவர் அடித்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top