செய்திகள்

ஹாட் கிஸ் அடிக்க இப்படியொரு பயிற்சியை எடுத்துள்ளாராம் திஷா படானி!

ஹாட் கிஸ் அடிக்க

மலங் படத்தின் போஸ்டர், டிரைலர் என வெளியாகி பாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ள நிலையில், கிஸ் அடிப்பதற்காக இப்படியொரு பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ள தகவல் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

காதலர் தின ஸ்பெஷல் டி-சீரிஸ் தயாரிப்பில் மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், திஷா படானி, அனில் கபூர், குணால் கேமு நடிப்பில் உருவாகியுள்ள மலங் திரைப்படம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.

மலங் படத்தின் ஹாட் கிஸ் போஸ்டர் வெளியாகி வைரலானது. திஷா படானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த போஸ்டருக்கு ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளை குவித்தனர்.

ஆதித்யா கபூர் தோளில் அமர்ந்து திஷா படானி லிப் லாக் செய்யும் அந்த போஸ்டர் இணையதளத்தில் தீயாய் பரவியது. 22 மில்லியன் வியூஸ் மலங் படத்தில் இடம்பெற்றுள்ள சல் கர் சலேன் பாடல் நேற்று முன் தினம் வெளியானது.

ஒரே நாளில் 22 மில்லியன் வியூக்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது என்பதை திஷா படானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மலங் திரைப்படத்திற்காக நீருக்கடியில் திஷா படானி, ஆதித்யா ராய் கபூர் ஹாட் கிஸ் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதற்காக தனியாக பயிற்சி மேற்கொண்டு திஷா படானி நடித்துள்ளார்.

பாலிவுட்டின் இளம் நாயகிகள் பட்டியலில் ஹாட் கிளாமர் குயினாக வலம் வருகிறார் திஷா படானி. தனது ட்விட்டர் பக்கத்தில் படு செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மலங் திரைப்படத்திலும், செம்ம ஹாட்டாக பிகினி அணிந்தும் லிப் லாக் அடித்தும் நடித்து ரசிகர்களை கவரவுள்ளார். ஏடிவி பைக் பீச்சுகளில் ஓட்ட பயன்படும் ஏடிவி ரக பைக்குகளை ஓட்டவும் திஷா படானி தனி பயிற்சி மேற்கொண்டு அந்த காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம்.

இளைஞர்களுக்கு பிடிக்கும் அளவிற்கு கிளாமராகவும், லவ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என மலங் படம் கலந்து கட்டி அடித்து கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக உருவாகியுள்ளதாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top