செய்திகள்

நாளொன்றுக்கு 40 காசில் வாழ்ந்த மாணவி மரணம்… மனதை உருக்கும் சோகம்

மாணவி

நாளொன்றுக்கு 2 யுவானில் (40 காசு) வாழ்ந்துகொண்டிருந்த 24 வயது மாணவி உயிரிழந்துள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 ஆண்டுகாலமாக அவ்வாறு வாழ்ந்து வந்த வூ ஹுவாயான் (Wu Huayan) என்ற பெண், மனநலம் குன்றிய தனது தம்பியைப் பார்த்துக்கொள்ளப் போராடினார்.

பெற்றோர் இல்லாத அவர், ஒவ்வொரு மாதமும், உறவினர்கள் வழங்கிய பணத்தைத் தம்பியின் சிகிச்சைக்காகச் செலவிட்டார்.

எஞ்சியுள்ள பணத்தில் போதுமான உணவைச் சாப்பிட இயலாத ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டார்.

அவரின் எடை 20 கிலோகிராம். கடந்த அக்டோபர் மாதம் சுவாசிக்கச் சிரமப்பட்டார்.

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்கு இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.

வறுமை காரணமாக மரணத்திற்குக் காத்திருக்க விரும்பவில்லை என்று Chongqing Morning Post நாளேட்டிடம் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிய அவரின் கதை, பல்வேறு நபர்களிடமிருந்து நன்கொடையைத் திரட்டியது. இருப்பினும், காலம் கடந்த நிலையில் அவருக்குச் சிகிச்சை உதவவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top