செய்திகள்

சவுதியில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதியில்

2019 ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியாத 6 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியா 2019ஆம் ஆண்டு 184 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ரிப்ரீவ்’ (Reprieve) சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

அதில், 2019ஆம் ஆண்டு அந்நாட்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் சவுதி அரேபியர்கள் எனவும் 90 பேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்த அமைப்பின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தவிர, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணாப்படாத 6 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என ரிப்ரீவ் அமைப்பின் தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக 2019 ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அந்த நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேறியது 2019ஆம் ஆண்டில்தான் எனவும் ரிப்ரீவ் தெரிவிக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top