செய்திகள்

பறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்! வைரல் வீடியோ!

ஏலியன்கள்

ஏலியன் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் பரவலாக பரவி வந்தாலும், ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

ஆனால் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் ஏலியன் குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏலியன் குறித்த சர்ச்சைகள் பலவும் பெரியளவில் அமெரிக்க பகுதில் தான் நிகழ்கிறது. இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, ஏரியா 51 பகுதி அங்குதான் உள்ளது.

ஏலியன்கள் பறக்கும் தட்டில் வளம் வருவார்கள் என்று படங்களில் நாம் பார்த்திருக்கிறோம், அதுபோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பறக்கும் திட்டு ஒன்று பறக்கும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏலியனின் பறக்கும் தட்டை கண்டதாகவும், அந்த நிகழ்வின் சிசிடிவி கேமரா ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 23, 2018 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது சந்தேகத்தில் இந்த விடியோவை தந்து மகனிடம் காட்டியுள்ளார். அவரும் இது ஏலியன் பறக்கும் தட்டு தானே என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.

சந்தேகமாக இருந்த காரணத்தினால் அப்பொழுது இந்த விடியோவை வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெனிஃபீல்ட் அண்மையில் அவரின் கேலரியில் இந்த வீடியோவை பார்த்துள்ளார். இம்முறை சந்தேகம் எதுவும் இல்லாமல் நிகழ்ந்த நிகழ்வை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கும் இதுபோன்ற செய்திகள் சென்றைடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top