செய்திகள்

நடிகையின் டிவிட்டர் கணக்கு ஹேக்… ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்

Actress, meera mithun, social media, hacked, நடிகை, மீரா மிதுன், சோசியல் மீடியா, மீட்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், உடன் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின் மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறினார்.

இதனால் படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அவர், அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவரது ஓவர் ஹாட் படங்களை கண்டு, ரசிகர்கள் சரமாரியாக விளாசித்தள்ளுவதும் நடக்கும். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளக் கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் தனது பாஸ்வேர்டை மாற்றி விட்டார்கள் என்றும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் மீரா மிதுன்.

இதையடுத்து, ரசிகர்கள் அவரை சரமாரியாக ரவுண்ட் கட்டி விளாசினார். இனிமேலாவது ஆபாச போட்டோக்களை பதிவிட வேண்டாம் என்று ஒரு ரசிகர் தெரிவித்திருந்தார்.

மற்றொருவர், ஐயையோ இது சர்வதேச பிரச்னையாச்சே என்று கிண்டலடித்திருந்தார். வேறொரு ரசிகர், கடவுளே என்னாச்சு? நாங்க ரொம்ப கவலைல இருக்கோம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தனது சமூக வலைத்தளக் கணக்குகள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார் மீரா மிதுன். ‘இதுக்கு ட்ரீட் இல்லையா? என்று கேட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top