செய்திகள்

இரவில் சிறுமிகள் வரணும், ஆன்மீக தீட்சை… வாட்ஸ்ஆப்பில் ஆபாச குரூப்..!

காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வாட்ஸ்ஆப்பில் ஆபாச குரூப் ஒன்றை தொடக்கி அதில் சிறுமிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாக ஜனார்த்தனன் சர்மா புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் குடியுரிமை சட்டம், கலவரம், போராட்டம், பொருளாதார நெருக்கடி என்ற பல விவகாரங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நித்யானந்தா.

ஹோட்டல் அறையில் இருந்து வெளியான ஆபாச வீடியோ முதல் சிஷ்யைகளை கடத்திய விவகாரம் வரைக்கும் அவருடைய க்ரைம் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த நிலையில் நித்தியானந்தா பிடியில் இருக்கும் தனது இரு மகள்களை மீட்டு தரக்கோரி நித்யானந்தாவுடைய முன்னாள் செயலாளர் ஜனார்த்தனன் சர்மா அகமதாபாத் காவல் நிலையத்துக்கும், குஜராத் நீதிமன்றத்துக்கும் படையெடுத்து வருகிறார்.

தற்போது குஜராத் நீதிமன்றத்தில் பிராமண பாத்திரத்தை தாக்கல் செய்த அவர் ‘ நித்தியானந்தா குறிப்பிட்ட சிலரை கொண்டு ஆபாச வாட்ஸ்ஆப் குரூப்பை நடத்தி வருகிறார். அதில் என்னுடைய மகள்கள் தத்துவ பிரியானந்தா மற்றும் நித்ய நந்திதா இருவரும் உள்ளனர்.

அந்த குரூப்பில் உள்ளவர்களை நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லி நித்யானந்தா வற்புறுத்துவதாகவும், இரவு நேரங்களில் அவருடைய ரூமிற்க்கு ஆன்மீக தீட்சை என்ற பெயரில் சிறுமிகள் சென்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top