செய்திகள்

மூன்று முகத்தை 30 முறை கூட பார்க்கலாம். ஆனா தர்பார்… ஸாரி முருகதாஸ்!

மூன்று முகத்தை 30 முறை கூட பார்க்கலாம்

மூன்று முகத்தை 30 முறை கூட பார்க்கலாம்

டெல்லி போலீஸ் கமிஷ்னராக ரஜினி (ஆதித்ய அருணாச்சலம்). மும்பையில் போதை கும்பல் தலைவன், 17 போலீஸ்காரர்களை உயிரோடு எரித்து கொலை செய்கிறான்.

அவனை பிடிக்கவும், அவனது போதை கும்பல் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும் மும்பை கமிஷ்னராக பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

மும்பைக்கு வந்த முதல் நாளிலேயே அதிரடி கமிஷனராக களமிறங்கும் ரஜினி, போதை கும்பலையும், பின்னணியில் இருக்கும் தொழிலதிபரின் மகனையும் கைது செய்கிறார்.

தன் மகனை விடுவிக்க தொழிலதிபர் செய்யும் செயல்களை ரஜினி முறியடிப்பது தான் தர்பார்.

மூன்று முகம் படத்திற்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார் ரஜினி.

படத்தின் முதல் பாதி முழுக்கவே ரஜினியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் ரசிகர்கள். வெறித்தனமான என்கவுண்டர்கள், மனித உரிமை கமிஷன் தலைவரையே மிரட்டுவது என்று படம் முழுக்கவே ரஜினியிஸம்… ஆஸம்!

இன்னொரு பக்கம் நயன்தாராவுடன் ரொமான்ஸ், யோகி பாபுவுடன் காமெடி என நிஜமாகவே 20 வருடத்திற்கு முந்தைய ரஜினியைப் பார்த்து ரசிக்க முடிகிறது. டிக்கெட்டின் விலை இந்த முதல் பாதிக்கே சரியாகி விடுகிறது.

ரஜினிக்கு ஜோடியாக இருந்தாலும், நயனுக்கு அதிக காட்சிகள் இல்லை. வருகிற ஓரிரு காட்சிகளும் சுத்தமாக படத்துடன் பொருந்தவில்லை.

ரஜினியை கலாய்க்கும் யோகி பாபு காமெடி படத்தின் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ரசிகர்களின் மனசில் யோகிபாபு இன்னும் கொஞ்ச காலத்திற்கு நின்று விளையாடுவார்.

முதல் பாதியில் ஒரு வில்லன், இரண்டாம் பாதியில் ஒரு வில்லன் என இரண்டு வில்லன்கள் இருந்தாலும் முதல் பாதி வில்லன் நடிப்பில் மிளிர்கிறார்.

படத்தின் பிற்பகுதி காட்சிகளில் வில்லனுடன் சேர்ந்து இயக்குநர் முருகதாஸும் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.

அனிருத்தின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே. அனிருத்தை விட சந்தோஷ் சிவன் கேமிர அப்ளாஸ் வாங்கியிருக்கிறது.

அற்புதமான திரைக்கதையில் முதல் பாதியை கொண்டு சென்ற முருகதாஸ், இரண்டாம் பாதியில் ரஜினியின் தர்பாரை சீட்டுக் கட்டைப் போல அப்படியே சரிய விட்டு இருப்பது தான் அதிர்ச்சி. பின் பகுதி முழுக்கவே படு சொதப்பலான திரைக்கதை ரசிகர்களை ஏமாற்றுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top