செய்திகள்

வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

வெற்றி வாய்ப்பு

இந்தியா – இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 7 மணி அளவில் இந்தூரில் அமைந்துள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினால் போதுமென்ற நிலையில் இரு அணிகளின் வீரர்கள் இருந்தாலும் ஷர்துள் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவே இதனை பார்க்கவேண்டியதிருக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் களமிறங்குவதால் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் தாகூர் மற்றும் சைனி ஆகியோரின் ஓவர்களில் அதிரடியாக ஆட முற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற சூழல் எழுந்துள்ளது.

இந்நிலையில் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள இந்தியா – இலங்கை அணிகளுள் இந்தியா 13 முறையும் இலங்கை 3 முறையும் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இந்தியா 10-0 என்று முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் ஈரமானதால் முதலாம் டி20 போட்டி ஓவர்கள் எதுவும் வீசப்படாமல் ரத்தானது. சென்றமுறை இந்தூர் மைதானத்தில் இலங்கையுடனான டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா அதிவேக சதம் அடித்து இலங்கை பவுலர்களை திணறடித்தார்.

டி20 தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்காதது இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இரண்டாம் டி20 போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 8 போட்டிகள் விளையாடி 8 போட்டிகளையுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top