செய்திகள்

யோகி பாபு – கேத்ரின் தெரசா பெயர் கூறி 10 இலட்சம் மோசடி!

யோகி பாபு - கேத்ரின் தெரசா

யோகி பாபு – கேத்ரின் தெரசா பெயர் கூறி 10 இலட்சம் மோசடி!

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் போஸ்-ரவிச்சந்திரன். சினிமா தயாரிப்பாளர்களான இவர்கள் அலிபாபாவும் 40 குழந்தைகளும் என்ற படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதில் யோகி பாபு மற்றும் நடிகை கேத்ரின் தெரசா இருவரையும் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்து அவர்களின் கால்ஷீட் வாங்கி தர வடபழனி என்.ஜி.ஓ. காலனியில் அலுவலகம் நடத்தி வரும் சினிமா பிரமுகர் அண்ணாதுரையை சந்தித்துள்ளனர்.

இருவரின் கால்ஷீட் வாங்கித்தர 30 இலட்சம் வரை செலவாகும் என்று அண்ணாதுரை கூற அதற்கு சம்மதம் சொன்ன தயாரிப்பாளர்கள் முதல்கட்டமாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையைக் கொடுத்துள்ளனர். ஆனால் கூறிய படி அண்ணாதுரை கால்ஷீட்டும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து வடபழனி காவல்நிலையத்தில் போஸ்-ரவிச்சந்திரன் இருவரும் புகார் அளித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top