செய்திகள்

பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் துஷ்பிரயோகம்… வைத்தியர் கைது

பேஸ்புக் காதலால், பாலியல் துஷ்பிரயோகம்

பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் துஷ்பிரயோகம்… வைத்தியர் ஏற்பட்ட நிலை

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை, பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அம்பாறை, உகன சேனரத்னபுர கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்பதற்கு வைத்திய பரிசோதனை அவசியம் என தெரிவித்து குறித்த மாணவிகள், வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தாம் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக குறித்த மாணவிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

14,17 மற்றும் 18 வயதுடைய மாணவிகளே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவிகள், அம்பாறை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட வைத்தியர், அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகத்தில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, அம்பாறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சந்தேக நபரான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top