செய்திகள்

நடிகை கௌதமியின் முதல் கணவர் இவர் தான்…வைரல் போட்டோ

நடிகை கௌதமியின் முதல் கணவர்

நடிகை கௌதமியின் முதல் கணவர் இவர் தான்…வைரல் போட்டோ

1983 ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமே வருக என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் சினிமாவில் நுழைந்த கௌதமி 1987 ஆம் ஆண்டு தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடித்தார்.

இதன் பின்னர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானார். இதையடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்த கௌதமி பல முன்னணி நடிகர்களின் ஜோடியானார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டிய கௌதமி கடந்த 1998 ஆம் ஆண்டு தொழிலதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் ஒரே வருடத்திற்குள் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1999 ஆம் ஆண்டு சந்தீப்பை விவாகரத்து செய்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரை நடிகர் கமல் ஹாசன் அரவணைத்துக் கொள்ள, இருவரும் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கமலை விட்டு பிரிவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கௌதமி மற்றும் அவரின் முதல் கணவர் சந்தீப் பாட்டியா இருவரின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருமண புகைப்படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top