செய்திகள்

விஜய் தான் காரணம்… அவர் மீது தான் பழி போடுவேன்… நடிகை சுனைனா

நடிகை சுனைனா

தமிழில் நடிகர் நகுல் அறிமுகமான கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா.

பின்னர் மாசிலாமணி, வம்சம், சமர், போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதே போல கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

இறுதியாக விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘நிலா நிலா ஓடி வா ‘ என்ற வலைதள தொடரிலும் நடிகை சுனைனா நடித்து வருகிறார். மேலும், நடிகை சுனைனா அவர்கள் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “சில்லுக் கருப்பட்டி” என்ற படம் வெளியானது. இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படமாகும். காதலின் நான்கு படிநிலைகளை அழகாக எடுத்துக் கூறிய படமாகும்.

இந்த படத்தில் சுனைனா தன்னுடைய கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்து உள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி உள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் சுனைனா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் தொகுப்பாளர் ஒருவர் சில்லுக் கருப்பட்டி படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டு உள்ளார். அதற்கு சுனைனா அவர்கள் கூறியது,

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கங்கள் இருக்கும். எல்லாருடைய உறவுகளிலும் ஏற்றம், இறக்கங்கள் இருக்கும். அதனால் எப்பவுமே ஒரே மாதிரியாக இருக்கும் என்று நினைப்பது தவறு. ஆனால்,பல ஆண்டுகளாக ஷாருக்கான், விஜய் போன்றவர்களின் படங்களில் காண்பிக்கப்படும் உறவுகள் எந்த பிரச்னையும் இல்லாதது போல தான் காண்பிக்கப்பட்டது.

அதை பார்த்து தான் நாம் நமக்கு வரும் துணை மிகவும் Perfect ஆக இருக்க என்று எதிர்பார்த்து விடுகிறோம். ஆனால், அப்படி ஒரு உறவு யாருக்கும் நிஜ வாழ்க்கையில் அமைந்து விடாது. ஏற்ற தாழ்வுகள் இருந்தால் தான் அந்த உறவு முழுமை பெரும். ஆனால், பல ஆண்டுகளாக விஜய், ஷாருக்கான் போன்ற படங்களில் காண்பிக்கபடும் காதல் கதைகளில் எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும் ஒரு சுமுகமான உறவை தான் நாம் பார்த்து வளர்ந்தோம்.

ஆனால், நிஜத்தில் அப்படி முடியாது, அப்படி அமையவும் அமையாது. எனவே, என்னுடைய எதிர்பார்ப்பிற்கு நானும் அப்படி நினைத்ததற்கும் இந்த விஷயத்தில் காரணமாக இருந்த விஜய் மற்றும் ஷாருக்கான் மீது தான் நான் பழி போடுவேன், என்று கூறிய சுனைனா பின்னர் இறுதியில் சும்மா விளையாட்டிற்கு தன சொன்னேன் என்று சிரித்தபடி கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தற்போது தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தான் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதில் கொஞ்சம் வித்தியாசமாக நாங்கள் சில்லு கருப்பட்டி படத்தில் சொல்லி இருக்கோம். உதாரணத்துக்கு சொல்ல போனால் அம்மா –அப்பா, அண்ணன்– தம்பி, கணவன்– மனைவி என்று எல்லாருடைய உறவுகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்க்கையில் கூட இருந்து உள்ளது. அவருடைய வாழ்க்கையில் பல காதல் கதைகள்.

நம்ம தளபதி விஜயின் வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. தளபதி விஜயுடன் தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று கூறியிருந்தார். தற்போது எரியும் கண்ணாடி என்று புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை சுனைனா என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top