செய்திகள்

புதுவருடத்தில் பிக் பாஸ் ரித்விகா, சேரனுக்கும் அடித்த லக்… என்னனு பாருங்க!

புதுவருடத்தில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘பரதேசி’ என்ற படத்தில் ரித்விகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார் ரித்விகா. சமீபத்தில் வெளியான குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரித்விகா நடித்து இருந்தார்

.அதே போல் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார் இய்குனார் சேரன். இயக்குனர் சேரன் அவர்கள் திரையுலகில் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையிலும் சிறந்தவர் என்று இந்த இயல்பான பாஸ் வீட்டில் நிரூபித்து விட்டார்.

மேலும், இயக்குனர் சேரன் அவர்கள் நடிகர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர். இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். தன்னுடை பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்ற ரித்விகாவுக்கும், பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இயக்குனர், நடிகர் சேரனுக்கும் விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் நவீன் அவார்டு என்ற விருது வழங்கும் விழா ஒன்று நடை பெற்றது. இந்த விருது விழாவில் நடிகை ரித்விகா, இயக்குனர் சேரன் ஆகிய இவர்கள் இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. தற்போது இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து ரித்விகா தன்னுடைய ட்விட்டரில் கூறியது, இந்த வருட புத்தாண்டில் நடந்த நல்ல விஷயங்கள் என்று விருது வாங்கும் புகைப்படம் போட்டு பகிர்ந்து உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இவர்கள் இருவரும் அவ்வளவாக எந்த ஒரு சர்ச்சையிலும், பிரச்சனையிலும் சிக்காத நிலையில் நல்ல பெரிய எடுத்துக் கொண்டு வெளியேறியவர்கள்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு இவர்கள் இருவருக்கும் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தன. அதோடு இவர்கள் இருவரும் தங்களுக்கு வந்த வாய்ப்பினை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டு பிரபலம் அடைந்து வருகிறார்கள். த

ற்போது புதிய ஆண்டில் சேரன் மற்றும் ரித்விகாவிற்கும் இப்படி ஒரு விருது கிடைத்தது அவர்களுக்கு அடித்த லக்காக பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top