செய்திகள்

ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள வங்கிகளுக்கு பொதுவாக ஞாயிற்றுகிழமைகளிலும், இரண்டு சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. அதை தவிர உள்ளூர், மாநில விடுமுறைகளை பொறுத்து மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

அந்தவகையில், வரும் ஜனவரி மாதம் 5 ஞாயிற்றுகிழமை வருவதால், 5 விடுமுறை வருகிறது. இது தவிர 11 மற்றும் 25ஆம் திகதிகளில் இரண்டாவது, 4வது சனிக்கிழமை என்பதால் இந்திய அளவில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 1ஆம் திகதி புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஜன.2 ஆம் திகதி மன்னம் ஜெயந்தியையொட்டி கேரளாவிற்கும், குரு கோபிந்த் சிங் பிறந்த நாளையொட்டி பல மாநிலங்களிலும் விடுமுறை.

ஜன. 15ஆம் திகதி பொங்கல்/போகி/மகர சங்கராந்தியையொட்டி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு விடுமுறை.

ஜனவரி 16, திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழகம், புதுச்சேரியிலும், ஜன., 17 – உழவர் திருநாளையொட்டி தமிழகம், புதுச்சேரியிலும் விடுமுறை, ஜன.,23 நேதாஜி பிறந்த நாளையொட்டி மே.வங்கம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாமிலும், ஜன.,30 வசந்த பஞ்சமியையொட்டி பல மாநிலங்களிலும், ஜன.,31 அசாமிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top