செய்திகள்

இலட்சக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை ரோட்டில் வீசியெறிந்து கிறிஸ்துமஸ் பாட்டு பாடிய நபர்

கிறுஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் கோலகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு முதியவரின் செயல் பரபரப்பாகியது.

கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை 65 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார முதியவர் ஒருவர் அண்மையில் கொள்ளையடித்துள்ளார்.

வெள்ளை தாடியுடன் காணப்பட்ட அந்த வெள்ளைக்கார முதியவர் ஆயுதத்துடன் அச்சுறுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

அதன்பின் அந்தப் பணத்தை நாலா திசையிலும் தூக்கி வீசி எறிந்த படி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த மக்களும் உற்சாகம் அடைந்தனர். மக்களும் இன்ப அதிர்ச்சியில் அவருக்கு பதில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “வங்கியில் பணத்தைக் கொள்ளை அடித்த அந்த முதியவர் வெளியில் வந்தவுடன் கொள்ளையடித்தப் பணத்தை தெருவில் வீசினார்,” என்றார்.

பணம் முழுவதையும் விசிறியடித்தபின், தன் கடமை முடிந்ததுபோல் அமைதியாக அந்தப் பகுதியிலுள்ள பிரபல காபி கடையான ஸ்டார்பக்ஸ் அருகே வந்து நின்றார். அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

காவல்துறையினர் வருவதை பார்த்து அந்த முதியவர் தப்பியோட முயற்சிக்கவில்லை. விசாரணையில் முதியவரின் பெயர் டேவிட் வெய்ன் ஆலிவர் என்பது மட்டும் தெரியவந்தது. எதற்காக கொள்ளையடித்தார், அந்த பணத்தை ஏன் வீதியில் வீசினால் என்று தெரியவில்லை என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top