செய்திகள்

அந்த காதலர் இவர் தானாம்… போட்டுடைத்த ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா.

முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் இருந்தார். அதற்கு பின்னர் தான் சினிமாவில் நடிகையாக மாறினார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம்தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கி சமீபத்தில் வெளியான வடசென்னை படம் வேறு நடிகை ஆண்ட்ரியா பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பாடகியாக தான் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் பாடியதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதோடு ஆண்ட்ரியா அவர்கள் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்படி கலகலப்பாக போய்க்கொண்டு இருக்கும் ஆண்ட்ரியா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டது கூறியதாக செய்திகள் பரவியது.

அதில், அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்ததாக செய்திகள் பரபரப்பாக பரவியது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று ஆண்ட்ரியா கூறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள ஆண்ட்ரியா, நான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது என்னை ஒரு அரசியல்வாதி ஒருவர் சீரழித்து விட்டதாக கூறியதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால். உண்மையில் நான் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் எந்த பத்திரிக்கையாளரும் கிடையாது.

என் வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக பேசினேன். மேலும் நான் வெளியிடுவதாக இருந்த புத்தகத்தில் அந்த நபரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சியின் போது அந்த புத்தகத்தில் இருந்த ஒரு poem ஐ தான் நான் படித்தேன்.

அப்போது ஒரு சிலர் அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் பற்றிய கவிதை அது மேலும் 10 வருடங்களுக்கு முன் இருந்த காதல்தான் என்றும் , பத்து வருடத்திற்கு முன்னால் அந்த கவிதையை நான் எழுதி இருந்தேன் என்று கூறி இருந்தேன்.

ஆனால், அதன்பின்னர் நான் பேசியதாக கூறப்படும் அனைத்தும் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. நடிகர், அரசியல்வாதி என்றெல்லாம் கூறி பொய்யான ஒரு விஷயத்தை பரப்பி வருகிறார்கள் .

இதுபோன்றகட்டுக்கதையான விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படி விளக்கம் கொடுப்பது. அதனால் அமைதியாக இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா இதன்மூலம் பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top