செய்திகள்

23 வயது பெண்.. 5 பேர் கொண்ட கும்பல்.. நாசம் செய்து.. தீவைத்து கொளுத்தி.. அதிர வைத்த அராஜகம்

பேருந்துக்குள் சிறுமி வன்புணர்வு, 23 வயது பெண்

23 வயது பெண்ணை 5 பேர் சேர்ந்து நாசம் செய்து, தீ வைத்து கொளுத்திய கொடுமையொன்று அரங்கேறியுள்ளது.

தெலுங்கான பெண் டாக்டரை எரித்து கொன்ற சம்பவமே இன்னும் நம்மை விட்டு அகலாத நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

நேற்று முன்தினம், பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது. கருகிய நிலையில் அதனை போலீசார் கண்டெடுத்தனர்.

அந்த பெண்ணை யாரோ பலாத்காரம் செய்து, தலையில் துப்பாக்கியால் சுட்டு, அதன்பிறகு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர்.

இந்தநிலையில், அடுத்த சம்பவம் வட மாநிலத்தில் நடந்துள்ளது. குறிப்பாக உபி மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது.

அந்த இளம்பெண்ணுக்கு 23 வயதுதான் இருக்கும். மொத்தம் 5 பேர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். காம வெறி அடங்கியபின் தீ வைத்தும் அவரை எரித்துள்ளனர். உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்த நிலையில் பெண் அலறி துடிக்க. அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு 70 சதவீதம் இப்போது தீக்காயம் உள்ளது. ஆபத்தான நிலையில்தான் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பலாத்காரம் செய்த 5 பேர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால், இந்த 5 பேரில் ஒருவன், ஏற்கனவே அதாவது போன மார்ச் மாதம் இதே பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அதற்காக சிறைக்கும் போய், பிணையில் வந்துள்ளான். இதற்கு பிறகுதான் நண்பர்களை அழைத்து போய் அதே பெண்ணை சீரழித்துள்ளான்.

இப்போதைக்கு இதில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். அடுத்தடுத்து மாநிலங்களில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதுடன், தீயையும் வைத்து எரிப்பது மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top