செய்திகள்

மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிக்பாஸ் ரேஷ்மா? ரசிகர்கள் அதிர்ச்சி

மூன்றாவது திருமணத்திற்கு

நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசாலா படம், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரேஷ்மா. அதன்பின் பிக்பாஸ் 3 சீசனிலும் கலந்து கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரையும் பிரிந்து விட்டார்.

தன் திருமண வாழ்வில் பல துயரங்களை சந்தித்துவிட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட படி அவர் கூறிய சில சம்பவங்கள் பலரையும் கண் கலங்க வைத்தது.

இந்தநிலையில், அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் நெருக்காக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ வாழ்க்கை மிகவும் சிறியது. அதை உங்களை நேசிப்பர்களுடனும், சிரிக்க வைப்பவர்களுடனும் செலவு செய்யுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

எனவே, அந்த நபரை அவர் திருமணம் செய்து கொள்வார் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top