செய்திகள்

காதலியின் பிறந்த நாளன்று முகென் என்ன செய்துள்ளார் பாருங்க!

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் மற்றும் ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காது. முதல் சீசனில் ஓவியா- ஆரவ், இரண்டாவது சீசனில் மஹத்-யாஷிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

இந்த சீசனில் அபிராமி – கவின், முகென்- அபிராமி, கவின் – சாக்க்ஷி, கவின் – லாஸ்லியா என்று பல்வேறு வித்தனமா காதல் கதைகள் சுற்றிக்கொண்டே இருந்தது.

மூன்றாவது சீசனில் முதன் முதலாக காதலை ஆரம்பித்தது நடிகை அபிராமி தான். பிக் பாஸ் 3 துவங்கிய ஒரு சில நாளிலேயே கவின் மீது காதல் இருப்பதை வெளிப்படையாக கூறினார்.

ஆனால், கவின், அபிராமி காதலுக்கு செவி சாய்க்காததால் பின்னர் முகென் மீது காதலில் விழுந்தார் அபிராமி. ஆனால், முகெனும் அபிராமி காதலை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து கொண்டே தான் வந்தார்.

இருப்பினும் தொடர்ந்து முகெனை வெறித்தனமாக காதலித்து வந்தார் அபிராமி. ஒரு கட்டத்தில் முகெனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்ததும் அவருடன் சண்டை போட்டு காதலை முறித்துக்கொண்டார் அபிராமி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி பேசுகையில், சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் முகெனை பற்றியும் எவ்வாறு மிகைப்படுத்தப்படும் என்பதைப் பற்றி அந்தப் பெண்ணுடன் பேச விரும்பினேன். ஒரு நபராக முகன் எவ்வளவு நல்லவர் என்று அவளிடம் சொல்லவிரும்புகிறேன் .

ஆனால் முகன் என்னிடம் சொன்னதைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் ஒரு உறவில் இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர் அவளை முன்மொழிந்தார். அது ஒரு உறவு கூட இல்லை, அவள் இன்னும் அவனை காதலிக்க கூட இல்லை. எனவே, தொடர்பில்லாத ஒருவரிடம் பேசுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

அவர் வந்து பேசுவதற்காக நான் காத்திருக்கிறேன், அவர்கள் உண்மையிலேயே ஒரு உறவில் இருந்தால், அவர்களுக்கு அந்த புரிதல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் முகென் தனது காதலி குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். முகேன் காதலிப்பதாக கூறப்பட்ட நதியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மேலும் அதனை மூவி கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன் ஹாப்பி பர்த்டே என்று குறிப்பிட்டு உள்ளார் எனவே மற்றும் நதியாவின் காதல் உறுதியானது போல ரசிகர்கள் பலரும் கமன்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top