செய்திகள்

மாணவியை போதைக்கு அடிமையாக்கி வன்புணர்வு செய்த ஆசிரியர்

பேஸ்புக் காதலால், பாலியல் துஷ்பிரயோகம்

நீர்கொழும்பு பகுதியில் பாடசாலை மாணவியொருவரை போதைக்கு அடிமையாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளம் தமிழ் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே ஆசிரியர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

சில காலமாக மாணவியை உளவியல் ஆலோசனைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்து, தனது வாகனத்தில் அழைத்துச் செல்லும் ஆசிரியர், வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிரியர் இதன்போது மாணவிக்கு போதை மாத்திரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை உறுதியானதை அடுத்து 35 வயதான, திருமணம் முடித்த குறித்த தமிழ் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top