செய்திகள்

கருங்கடல் பகுதியில் செம்மறியாடுகளுடன் கவிழ்ந்த கப்பல்

ருமேனியக் கரையோரத்தின் கருங்கடல் பகுதியில் செம்மறியாடுகளுடன் கவிழ்ந்த சரக்குக் கப்பலில் உயிருடன் இருக்கும் ஆடுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சரக்குக் கப்பலில் சுமார் 14,000 செம்மறியாடுகள் இருந்ததாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சரக்குக் கப்பலின் அடிப்பகுதியில் ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

செம்மறியாடுகளை ஏற்றிச் சென்ற Queen Hind எனும் கப்பல் ருமேனியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் கவிழ்ந்தது.

கப்பலில் இருந்த மாலுமிகளும் உதவியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கப்பலின் சரக்குக் கிடங்கில் உள்ள செம்மறியாடுகளை உயிருடன் மீட்டுவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top