செய்திகள்

2019இல் தமிழில் 100 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள்

பிகில்

தமிழ் திரைப்படங்களின் தலைப்பு சமூக வலைதளத்தின் மூலம் இணையத்தில் ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகி வருகிறது.

இதற்கு தமிழ் திரையுலக ரசிகர்களின் அன்பும், ஆர்வமும் தான் முக்கிய காரணம். ஹாலிவுட் திரைப்பட நிர்வாகமும் தமிழ் திரைப்படங்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது.

வசூல் ரீதியாக தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பல திரைப்படங்களில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்த ஆண்டு தமிழில் விஜய், ரஜினி, அஜித்யை தொடர்ந்து தனுஷ், கார்த்தி, சூர்யா திரைப்படங்களும் 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப் எனப்படும் பட்டியலில் இணைந்துள்ளது.

இங்கு 2019-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வசூல் ரீதியாக தொகுக்கப்பட்டுள்ளது.

1. பிகில் (300+ கோடி)

வகை

Action ,Drama ,Sports

வெளியீட்டு தேதி – 25 Oct 2019

நடிகர்கள் – விஜய்,நயன்தாரா

எதிர்மறை விமர்சனங்கள் பல இருப்பினும் வசூல் ரீதியாக சாதனை படைத்த திரைப்படம். முதல் நாளிலையே அதிக வசூல் செய்து இந்த ஆண்டின் வசூல் நிலவரத்தில் முதல் படமாக உள்ளது.

2. பேட்ட (250+ கோடி)

வகை – Action

வெளியீட்டு தேதி – 10 Jan 2019

நடிகர்கள் – ரஜினிகாந்த்,விஜய் சேதுபதி

ரஜினி, விஜய் சேதுபதி என பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவான இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

3. விஸ்வாசம் (200+ கோடி)

வகை – Action

வெளியீட்டு தேதி – 10 Jan 2019

நடிகர்கள் – அஜித் குமார்,நயன்தாரா

தமிழில் மட்டும் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள திரைப்படம். இத்திரைப்படம் 2019-ம் ஆண்டின் சிறந்த படமாக பல திரைப்பட நிறுவனத்தால் தெரிவாகியுள்ளது.

4. நேர்கொண்ட பார்வை (181+ கோடி)

வகை – Drama, Thriller

வெளியீட்டு தேதி – 08 Aug 2019

நடிகர்கள் – அஜித் குமார்,வித்யா பாலன்

போனி கபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் படமாகும். இப்படம் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் வெளியாகி அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

5. அசுரன் (150+ கோடி)

வகை- Action

வெளியீட்டு தேதி – 04 Oct 2019

நடிகர்கள் – தனுஷ்,மஞ்சு வாரியர்

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான திரைப்படம். இத்திரைப்படம் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் தனுஷின் திரைவாழ்வில் 100 கோடி வசூலித்த முதல் படமாகும்.

6. காஞ்சனா 3 (130+ கோடி)

வகை – Comedy

வெளியீட்டு தேதி – 19 Apr 2019

நடிகர்கள் – ராகவா லாரன்ஸ்,ஓவியா

காஞ்சனா திரைவரிசையில் 3-ஆம் பாகமாக வெளியான திரைப்படம். பல விமர்சனங்களும், எதிர்மறை கருத்துகளும் இப்படத்தினை பற்றி இணையத்தில் வெளியாகினாலும் 100 கோடி வசூல் செய்து இத்திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

7. கைதி (110+ கோடி)

வகை – Action

வெளியீட்டு தேதி – 25 Oct 2019

நடிகர்கள் – கார்த்தி,நரைன்

மிக குறைந்த பொருட்செலவில் நாயகி கூட இல்லாமல் அதிரடியினை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் படக்குழுவின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு இத்திரைப்படம் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களிலையே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

8. காப்பான் (100+ கோடி)

வகை – Action

வெளியீட்டு தேதி – 20 Sep 2019

நடிகர்கள் – சூர்யா சிவகுமார்,மோகன்லால்

கே வி ஆனந்த், சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம். பல வெற்றி படங்களுக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இப்படத்தின் மூலம் அரங்கேறியுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி பலரால் விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூல் செய்து பிரபலமாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top