செய்திகள்

லாஸ்லியாவை காப்பியடித்த சாக்ஷி.. மானத்தை வாங்கிய நெட்டிசன்ஸ்!

சாக்ஷி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் சாக்ஷி மற்றும் லாஸ்லியா. இருவரும் கவினை காதலித்தனர்.

முதலில் சாக்ஷியைதான் காதலித்தார் கவின். பின்னர் லாஸ்லியாவும் அவரை காதலிக்க தொடங்கியதால் சாக்ஷியின் காதலுக்கு என்ட் கார்டு போட்டுவிட்டு லாஸ்லியாவுடன் காதல் மொழி பேச தொடங்கினார்.

லாஸ்லியாவுக்கும் சாக்ஷிக்கும் பெரும் சண்டை நடைபெற்றது. கவினை சாக்ஷி காதலிப்பதை அறிந்தும் அவரை காதலித்த லாஸ்லியா சாக்ஷியிடமும் ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினார்.

சாக்ஷியும் லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டனர். சாக்ஷியை வெளியேற்றிவிட்டு பிக்பாஸ் வீட்டில் உருகி உருகி காதலித்த கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

சாக்ஷி

ஆனால் வெளியே வந்த கையோடு விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் சாக்ஷியும் லாஸ்லியாவும்.

இந்நிலையில் சாக்ஷி இன்று பச்சை நிற ஆடையில் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் அதற்கு கோ க்ரீன் என்றும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா செடி கொடிகளுக்கு இடையே போட்டோ ஷுட் நடத்தி அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் கோ க்ரீன் என்றுதான் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top