செய்திகள்

பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்!

கெண்டல் ஜென்னர்

ஆஸ்கர் உயரிய விருது விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இதில் பல வகையான விருதுகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருது விழாவிற்கு பிறகு பார்ட்டி ஒன்றும் நடைபெறும்.

பொதுவாக விருது விழா என்றாலே அதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பல வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து, பார்வையாளர்களைக் கவர நினைப்பார்கள்.

ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்பவர்கள், விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, அங்குள்ளோர் அனைவரது கண்களும் அவர்கள் மீது படுமாறான விசித்திரமான உடையை அணிந்து வருவர்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொண்ட கெண்டல் ஜென்னர் பலரும் நினைத்திராத வகையில் ஒரு வித்தியாசமான உடையை அணிந்து வந்திருந்தார்.

கெண்டல் ஜென்னர் ஒரு அமெரிக்க மாடல். முக்கியமாக இவர் கிம் கர்தாஷினின் சகோதரியும் கூட. இவர் 2019 ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடந்த பார்ட்டிக்கு கருப்பு நிற கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இவர் கருப்பு நிற கவுனானது, எந்நேரத்திலும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக்கூடும் என்பதை நினைவு படுத்தும் வகையில் இருந்தது.

கெண்டல் அணிந்து வந்த கவுனின் இரு பக்கவாட்டுப் பகுதியிலும் இடுப்பளவில் பிளவுகள் கொண்டிருந்தது. இதனால் அவர் நடக்கும் போது, அசிங்கமாக உள்ளாடை தெரியும்படி இருந்தது. பேக்லெஸ் கவுன் கெண்டல் ஜென்னர் அணிந்திருந்த கருப்பு நிற ஒரு பேக்லெஸ் கவுன். இதனால் இவரது முதுகு முழுமையாக தெரிந்தது. இது இவரது கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்டியது.

கெண்டல் ஜென்னர் அணிந்து வந்த கருப்பு நிற கவுன் டீப் லோ நெக் கொண்டது. அதோடு பேக்லெஸ் கவுன் என்பதால், கெண்டல் பிரா ஏதும் அணியால் ப்ரீயாக வந்திருந்தார். கெண்டல் ஜென்னர் இந்த கருப்பு நிற கவுனிற்கு சிம்பிளான மேக்கப்பை போட்டு வந்திருந்தார். மேலும் ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேக்கப் அதிகம் போடாமல் சிம்பிளாக வந்தது, அவரது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஜென்னர் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு தான் அணிந்து வந்த வித்தியாசமான உடையில் பலவிதமான போஸ்களைக் கொடுத்தார். அப்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாகாமல் இருக்க, தனது கையால் நாசூக்காக உடையை சரிசெய்தவாறு போஸ் கொடுத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top