செய்திகள்

பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

பாலியல், இணையத்தில் விபசாரம்

எந்த வேலையும் இங்கு தவறில்லை என்ற பொதுவான பேச்சு, வழக்கில் உள்ளது. ஆனால், பாலியல் தொழில் செய்வர்களை அப்படி யாரும் சொல்லமாட்டார்கள். எல்லா தொழில்களிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்கள் வந்துவிட்டார்கள். ஒரே ஒரு வேலையில் மட்டும் ஆண்கள் எண்ணிக்கை மிகமிக குறைவு. அது பாலியல் தொழில்தான்.

பாலியல் தொழில் என்று சொன்னவுடன் அனைவர் மனதிலும் தோன்றுவது பெண்கள்தான். நிறைய நாடுகளில் பாலியல் தொழில் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது உலகிலே மிகவும் பழமை வாய்ந்த தொழில்.

இந்தியாவில் பாலியல் தொழில் என்பது சட்டமாக்கப்படவில்லை என்றாலும், மறைமுகமாக நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்முறைகளும் இந்தியாவில் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பாலியல் தொழில்

பாலியல் தொழிலாளிகளும் மனிதர்களே பாலியல் தொழிலாளிகளிலும் மனிதர்களே என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும். அவர்களை கண்டேலே எய்ட்ஸ் நோயாளியை பார்ப்பது போன்று பார்க்கும் இந்த சமூகம், அவர்களுக்கு சொல்லவருவது ஏன் இந்த இழி தொழிலை செய்கிறாய் என்பதுதான்.

உண்மையில் சொல்ல போனால், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் தாங்களாகவே விரும்பி இந்த தொழிலை செய்ய வந்தோம் என்று கூறுவது வெறும் ஒரு சதவீதம்தான். மீதி அனைவரும் இந்த சமூகத்தின் ஒடுக்கு முறையாலும், தன்னுடைய குடும்பத்திற்கும், கட்டாயத்தின் பேரிலும், ஏமாற்றப்பட்டவர்களாவும் தான் இருக்கிறார்கள்.

வேறு எந்த நல்ல வேலையும் இல்லையா? இந்த தொழில்தான் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி சூழ்நிலைக்கு ஏற்ப பாலியல் தொழிலாளியாக மாறியவர்களிடம் முன் வைக்கப்படும் கேள்வி. அவர்கள் கஷ்டப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த இந்த சமூகம், அவர்களின் தேவைகளுக்கு இந்த சமூகத்திடம் கையேந்தி நிற்கும்போது கண்டுகொள்ளலாத இந்த சமூகம், தன் உடலை விற்று தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறாள் குறை கூறும். கலச்சார போராளிகள் அன்பு, காதல், உறவு, மகிழ்ச்சி என அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நினைக்கிறோம்.

இந்த சமுதயாம் பெண்கள் மீது கட்டமைத்திருக்கும் மிகப்பெரிய ஒடுக்குமுறையே கற்பு என்பது.திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் கற்பை இழந்துவிட்டால் அவள் உயிர்வாழவே தகுதியற்றவளாக தான் இந்த சமூகம் அவளை பார்க்கிறது. இதில், அவள் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிந்தும், நடந்த சம்பவத்திற்கு சில கலாச்சார போராளிகள் பெண்களையேதான் குறைகூறுவார்கள்.அந்த போராளிகளின் உண்மையான முகம் இரவில்தான் தெரியவரும்.

பாலியல் தொழில்

டெல்லி நிர்பயா வழக்கை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. ஓடும் பேருந்தில் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் நிர்பாயா. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில், நிர்பயா ஏன் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சென்றால்? அவள் இரவு நேரத்தில் செல்லாமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்ற பேச்சு பெருமளவில் நம் காதில் விழுந்தவை.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவனைதானே நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். அதைவிட்டு நாம் ஏன் பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுகிறோம். பாதிப்பை ஏற்படுத்தியவனை பற்றி ஏன் பேச மறுக்கிறோம். பொதுவாக இப்படிதான் மனித உளவியல் யோசிக்க வைக்கிறது.

ஏதோ ஒரு சூழலில் குடும்ப அமைப்பில் இருந்து வெளியேற்ற பட்டதாலும், குடும்பத்திற்காக தன்னை தியாகம் செய்தும், கட்டாயப்படுத்துதலின் பேரில் நிறைய பேர் இந்த தொழிலில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில், ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் வற்புறுத்துதலின் பேரில் பாலியல் தொழில் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பாலியல் தொழில்

திருநங்கைகளும் இந்த தொழில் செய்து வருகின்றனர். இந்த சமுதாயத்தால் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் இவர்களுக்கு அடிப்படை உரிமை முதல் அனைத்தும் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சில திருநங்கைகள் அரசு வேலை, மற்றும் சுய தொழில் என்று முன்னேறி வருகின்றனர்.

தாங்களே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் தேவதாசி முறைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிறப்பின் அடிப்படியில் பாலினம் சார்ந்து பெண் ஒடுக்கப்படுகிறாள். அதேபோன்று சாதி பிறப்பின் அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியதுதான் தேவதாசி முறை.

ஆதலால், தாமாகவே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களையும் தேவதாசிகளையும் ஒப்பிட முடியாது. மேலும், டிஜிட்டல் இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களில் “தேவதாசி” முறை பல்வேறு வடிவங்களில் இன்னும் இருந்து வருகிறது.

குடும்ப உறவில் திருப்பதியில்லாத போதோ அல்லது ஒரு பொழுதுபோக்கிற்காகவோ ஆண்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் செல்கின்றனர். அவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறுதான் நடந்துகொள்ள பாலியல் தொழிலாளிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இதுவும் பாலியல் வன்கொடுமையே. அன்பு, காதல், பாசம், ஆசை என அவர்களுக்கும் உண்டு என்பதை அவர்களிடம் செல்லும் எத்தனை ஆண்கள் உணர்ந்தார்கள் என்பது அவர்களுக்குதான் வெளிச்சம். இவற்றிலும் சில சைக்கோக்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறுகிறார்கள் பாலியல் தொழிலாளிகள். சிகரெட்டால் சுடுவது, விருப்பமில்லாமல் மது அருந்த வற்புறுத்துவது என ஆண்களுக்கு இன்பங்களையும் இவர்கள் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

பாலியல் தொழில்

பாலியல் தொழிலாளிகள் நிறைய பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்க்கையையும், உயிரையும் இழந்துள்ளனர். உடலுறவில் விருப்பம் இல்லை என்று பாலியல் தொழிலாளியால் மறுப்பு தெரிவிக்க முடியாது. அவர்களை எப்படி அணுக வேண்டும் என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

மிருகம் வேட்டையாடுவதை போன்றுதான் பாலியல் தொழிலாளிகளிடம் நடந்துகொள்கிறார்கள். விருப்பம் இல்லாமல் இருந்தால் அது மனைவியாகவோ அல்லது பாலியல் தொழிலாளியாகவோ இருந்தால் கூட தொடக்கூடாது என்ற எண்ணம் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு.

சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்கு ஆளவதை தடுக்கவும், பெண்களின் விருப்பத்திற்கு எதிராகவும் தினமும் தினமும் அனுபவிக்கம் பாலியல் சித்திரவதைகளை ஒழிக்க அரசு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் மறுவாழ்வுக்கும் அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பல பாலியல் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top