செய்திகள்

சுயஇன்பத்திற்கு பிறகு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனுமாம்

சுயஇன்பம் காண்பது என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான உணர்வாகும். குறிப்பிட்ட அளவில் இருக்கும்வரை இதனால் எந்தவித ஆபத்துகளோ, பக்கவிளைவுகளோ ஏற்படப்போவதில்லை.

சுயஇன்பம் காண்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளே அதிகம் என்றாலும் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதுதான் நல்லது.
சுயஇன்பம் குறித்து உங்களுக்குள் எழும் பல கேள்விகளுக்கு விடை இருந்தாலும் சுயஇன்பத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் பலருக்கும் இருப்பதில்லை.

சுயஇன்பத்திற்கு பிறகு கண்டிப்பாக சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இது சுயஇன்பத்தின் போது பிறப்புறுப்பைச் சுற்றி வெளிப்படும் பாக்டீரியக்களை வெளியேற்றுகிறது. மேலும் இது உங்களின் பிறப்புறுப்பை சுற்றி இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்.

சுயஇன்பம்

சுயஇன்பத்திற்கு பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதுதான். பலரும் இதனை செய்வதில்லை, ஆனால் உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது என்பது அவசியமாகும்.

சிறுநீர் கழிப்பது பாக்டீரியாக்களை விரட்டினாலும் இது உங்கள் பிறப்புறுப்பைச் சுற்றி பாக்டீரியாக்கள் பரவுவதைத் ஜீரோ அளவிற்கு குறைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் கழுவுவது கூடுதல் பயனளிக்கும்.

பிறப்புறுப்பை சுத்தம் செய்த பிறகு நீங்கள் தாராளமாக ஓய்வெடுக்கலாம். முடிந்தால் ஒரு குட்டித் தூக்கம் போடவும், தூக்கம் வரவில்லை என்றால் வெறுமனே எடுத்து ஓய்வெடுக்கவும், அவ்வாறு செய்யும்போது உங்கள் உடல் முழுவதும் ஒரு அமைதிப்பரவும். சுயஇன்பம் என்பது உங்கள் தசைகளை தளர்வாக்கி, மனஅழுத்தத்தை குறைத்து, வலி நிவாரணியாக இருக்கும்.

உயிரணுக்கள் என்பது நமது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், புரோட்டின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலவையாகும். எனவே அது உங்கள் உடலை விட்டு வெளியேறும்போது சோர்வு ஏற்படுவது சகஜம்தான்.
இதனை நினைத்து அச்சப்படவோ, கலங்கவோ தேவையில்லை. இந்த சோர்வு விரைவில் நீங்கிவிடும். ஆனால் இந்த சோர்வு நீண்ட நேரம் நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும்.

சுயஇன்பம்

சுயஇன்பத்திற்கு பிறகு ஒருபோதும் அதிகம் யோசிக்கக்கூடாது. தவறான காரியம் எதுவும் செய்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சி கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஏனெனில் இது செய்யக்கூடாத காரியமா அல்லது தவறான காரியமோ இல்லை.

இது உங்கள் உடல்நலத்திற்கும், மனஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். எனவே ஒருபோதும் இதனை நினைத்து பயப்படவோ, தவறாகவோ நினைக்க வேண்டும். இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் இதனை செய்வதில்லை, உங்களுக்கு துணையாக இந்த கிரகமே உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலே கூறியது போல உயிரணுக்கள் என்பர் ஊட்டச்சத்துக்களும், புரோட்டின்களும் நிறைந்ததாகும். எனவே அதனை உடலை விட்டு வெளியேற்றும்போது, இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற வேண்டியது அவசியமாகும்.

நமது சோர்வு விரைவில் சரியாகிவிடும் என்றாலும் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற போதுமான ஊட்டச்த்துக்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சுயஇன்பம் செய்த இரண்டு மணி நேரத்திற்குள் ஏதாவது புரோட்டின் உணவை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியான முறையிலும், சுயஇன்பத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டும் செய்தால் சுயஇன்பத்தால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

மேலும் இழந்த ஊட்டச்சத்துக்களை சமன் செய்ய வேண்டியது அவசியமாகும். உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top