செய்திகள்

பிரபல ஸ்டார் நடிகர் மீது விஜய் நடிகை பாலியல் புகார்

பிரபல ஸ்டார் நடிகர்

காலையில் வாக்கிங் செல்லும் பிரபல ஸ்டார் நடிகர் மீது நடிகை இஷா கோபிகர், பலான புகாரை சுமத்தியுள்ளார்.

தமிழில் பிரசாந்துடன் காதல் கவிதை, விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடிகை இஷா கோபிகர் நடித்துள்ளார்.

திருமணமாகி குழந்தை பிறந்ததும் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளதுடன், சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்டார் நடிகர் மீது புகார் முன்வைத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர தெரிவித்ததாவது, “ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் படம் எடுக்கிறோம். அதனால் இந்த நடிகரை அழைத்து பேசுங்கள். நடிகர்களிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என் கூறினார். இதையடுத்து நான் அந்த நடிகருக்கு போன் செய்தேன்.

அந்த நடிகரோ, நான் ரொம்ப பிசி. டப்பிங் பேசுவதற்கும், மற்றொரு விஷயத்தை செய்வதற்கும் இடையே தன்னை தனிமையில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

இதன் பின்னணியை புரிந்துக்கொண்டு நாளை நான் ஃப்ரீயாக இல்லை, எப்பொழுது ஃப்ரீயாக இருப்பேன் என்று பின்னர் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி தப்பித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், அந்த நடிகர் அதிகாலையில் எழுந்து ஜிம் செல்லும் பழக்கம் உள்ளவர் என்றும் ஒரு க்ளு கொடுத்துள்ளார். ஒப்போது அந்த நடிகர் யாராக இருக்கும் என்பதுதான் தெரியவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top