செய்திகள்

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் பாடசாலை மாணவி செய்த கொடூரம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்

குழந்தை,மாணவி , மகளுக்கு திருமணம்

வயிற்றுவலியென கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி வைத்தியசாலை கழிவறைக்குள் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசியெறிந்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.

நிட்டம்புவ, வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கா.பொ.த உயர்தர மாணவியொருவரை வயிற்றுவலியென குறிப்பிட்டு அவரது தாயாரும், பாட்டியும் வத்துபிடிவால ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையின் கழிவறைக்குள் சென்று குழந்தையை மாணவி பெற்றெடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் தாயாரும், பாட்டியும் கழிப்பறை வாசலில் காத்திருந்த நிலையில், கழிப்பறை யன்னல் வழியாக குழந்தையை வெளியே மாணவி வீசியுள்ளார். கழிப்பறைக்கு வெளியிலிருந்த சீமெந்து தரையில் குழந்தை விழுந்துள்ளது.

பின்னர் அந்த பகுதிக்கு வந்த துப்பரவு தொழிலாளர்கள் குழந்தையை கண்டு, உடனடியாக தாதியருக்கு அறிவித்துள்ளனர். உடனடியாக குழந்தை அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து, மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெயாங்கொடவை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவனே கர்ப்பத்துக்கு காரணமென தெரிய வந்துள்ளது. மாணவியும், மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top