செய்திகள்

காதலியின் கற்பை காப்பாற்ற உயிரை விட்ட காதலன்

காதலியின்

ஆற்றங்கரையில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரை போதையில் வந்த இளைஞர்கள் கடுமையாகத் தாக்கி ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் இடம்பெற்றுள்ளது. 3 நாட்களுக்கு பிறகே அந்த இளைஞரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜீவித்குமார் என்ற இளைஞர் திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜீவித்துக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பெண், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ படித்து வருகிறார். காதலர்களான இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி மாலை 3 மணியளவில், கொள்ளிடம் பழைய பாலம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனிமையில் இருந்த ஜீவித், இந்து ஜோடியை கோகுல், கலையரசன் ஆகியோர் மிரட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

தனது காதலியிடம் அவர்கள் அத்துமீறுவதை பார்த்து ஆத்திரமடைந்த ஜீவித் முதலில் அவர்களிடம் கெஞ்சி உள்ளார்.

ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபடவே ஜீவித் 2 பேரையும் தடுத்து போராடி இந்துவை மீட்டுள்ளார். காதலியின் கற்பை காப்பாற்ற அவரை அங்கிருந்து ஓடிவிடு, இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்துவை அவர்கள் நெருங்காதபடி தடுத்து போராடியுள்ளார்.

உடனே இந்து அங்கிருந்து தப்பி பாலத்தின் வழியாக சமயபுரம் ரோட்டு கரைக்கு வந்துள்ளார். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மற்றும் சலவைத் தொழிலாளர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி ஜீவித்தை மீட்க வந்துள்ளார். ஆனால் ஜீவித் அங்கு இல்லை.

இதேவேளை, மூன்று நாட்களின் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top