செய்திகள்

‘அந்த விளம்பரங்களுக்கு’ தடை விதித்த டுவிட்டர்

டுவிட்டர்

அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமூக வலைதளமாக டுவிட்டரை பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதன் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது.

அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கருத்து வெளியிடுகையில்,

“முற்றிலும் தவறான தகவல்கள் மற்றும் போலியான தகவல்கள் ஆகியவற்றால் வரும் சிக்கல்களை தீர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் குறித்த விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்”என்று கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top