செய்திகள்

நிறை மாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன் – எதற்காக தெரியுமா?

மனைவி, கொலை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தினேஷ் குமாருக்கும், சுஷ்மிதாவுக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் (23) ஒன்பது மாத கர்ப்பிணியான சுஷ்மிதா கொலை செய்யப்பட்டு சாலை ஒரத்தில் அவரது உடல் கிடந்துள்ளது. தகவல் அறிந்து ஊர்க்காரர்கள் கூடினர்.

தினேஷ் குமாருக்கும் தகவல் சொல்லப்பட அவர் அழுது புலம்பியுள்ளார். சுஷ்மிதாவின் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் இல்லாததால் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தினேஷ் குமார் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் வேட சந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

மனைவியை இழந்த தினேஷ் குமார் தொடர்ந்து நகைக்காக கொலை செய்து விட்டார்களே என்று திரும்ப, திரும்ப கூறியதையடுத்து காவல்துறையினருக்கு அவர் மேல் சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் கொலையை தான்தான் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தினேஷ்குமாருக்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணத்தை கடந்த உறவு இருந்துவந்துள்ளது. பாண்டீஸ்வரிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரம் சுஷ்மிதாவுக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் பாண்டீஸ்வரியும் நமக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் இருக்கும்போது எதற்கு இன்னொரு குழந்தை என கூறியுள்ளார். நேற்றைய தினம் வேலைக்கு செல்வது போல் கிளம்பியுள்ள தினேஷ், சுஷ்மிதாவை தனியாக தோட்டத்துப் பக்கம் அழைத்துள்ளார்.

அங்கு அவர்களுக்குள் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் பெல்டால் சுஷ்மிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலை ஒரம் முட்புதரில் வீசியுள்ளார்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சுஷ்மிதா அணிந்திருந்த நகைகளை கழட்டி, பாண்டீஸ்வரியின் தாயார் வேலம்மாள் வீட்டில் வைத்துள்ளார்.

அதன்பின் தனது மனைவியை நகைக்காக கொலை செய்துவிட்டனர் என அழுது நாடகமாடியுள்ளார்.

பாண்டீஸ்வரி, அவரது தாய் வேலம்மாள், சகோதரர் பால்பாண்டி, சகோதரி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top