செய்திகள்

தென்னாபிரிக்காவுக்கு மரண காட்டு காட்டிய உமேஷ் யாதவ்

தென்னாபிரிக்காவுக்கு

தென்னாபிரிக்காவுக்கு மரண காட்டு காட்டிய உமேஷ் யாதவ்

இந்தியா, தென்னாபிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 224 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, ரஹானே (115) டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் ஷர்மா (212) டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டைசதத்தை பூர்த்தி செய்து வெளியேறினார். ரவிந்திர ஜடேஜா (51) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஹா (24) பெரிய அளவில் சாதிக்கவில்லை. அடுத்து வந்த உமேஷ் யாதவ் ஒரு காட்டு காட்டினார். வெறும் 10 பந்துகள் மட்டுமே களத்தில் இருந்த உமேஷ் யாதவ் 5 சிக்சர்கள் பறக்கவிட்டு 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் 10 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்த உமேஷ் யாதவின் ஸ்டிரைக் ரேட் 310 ஆக இருந்தது. இதன்மூலம் குறைந்தது 25 ஓட்டங்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் அடித்த வீர்ரகளில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் உமேஷ் யாதவ் முதலிடம் பிடித்தார்.

முன்னதாக கடந்த 2003/04ல் ஆக்லாந்தில் நடந்த டெஸ்டில் ஸ்டீபென் பிளமிங் 11 பந்தில் 31* ஓட்டங்கள் அடித்ததே (282 ஸ்டிரைக் ரேட்) சாதனையாக இருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top