செய்திகள்

வகுப்பறையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்.! கொலைநடுங்கிப் போன சக மாணவிகள்!!

வகுப்பறையில் மாணவி

மதுரை கே.புதூரில் காந்திபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் முத்து.இவருக்கு 11 வயது நிறைந்த அர்ச்சனா என்ற மகள் இருந்தார். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஒரு சில காரணங்களால் கடந்த ஒரு வாரமாக அர்ச்சனா பள்ளிக்கு செல்லவில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை வெகு முன்னதாகவே பள்ளிக்கு சென்றுள்ளார்.

மேலும் வகுப்பில் பிற மாணவிகள் யாரும் வருவதற்கு முன்பு அவர் சேலை ஒன்றால் தனது வகுப்பில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வகுப்பிற்கு வந்த பிற மாணவிகள் இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்த நிலையில் அவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தநிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்து தயாரில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, அர்ச்சனா வீட்டில் இருந்து வரும்போதே தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது அம்மாவின் சேலையை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top