செய்திகள்

மீரா மிதுனை தொடர்ந்து பப்பில் செக்ஸி டான்ஸ் ஆடிய பிரபல நடிகை!

செக்ஸி டான்ஸ்

மீரா மிதுனை தொடர்ந்து நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் பப்பில் படு செக்ஸியாக ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாகவும், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதீஷுடன் காரில் செல்லும் போது இவர் பேசும் காட்சியும் டயலாக் பெரும் பிரபலமானது. தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ஷாலு ஷம்மு.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் வீடியோக்களும் படுகவர்ச்சியாக உள்ளன.

அண்மையில் ஷாலு நீச்சள் உடையில் நீச்சள் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதால் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top